5 வயது சிறுவனை மயக்கம் அடையும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு மக்கள் தர்ம அடி..!

0 2859
5 வயது சிறுவனை மயக்கம் அடையும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு மக்கள் தர்ம அடி..!

பீகாரில், 5 வயது சிறுவனை மயக்கமடைந்து விழும் அளவிற்கு மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

தலைநகர் பட்னாவில் உள்ள டியூசன் சென்டரில் பணியாற்றி வரும் சோட்டு என்ற அந்த ஆசிரியர் 5 வயது சிறுவனை கட்டையால் கண்மூடித்தனமாக அடிக்கும் காணொளி இணையத்தில் வைரல் ஆனது.

ஒரு கட்டத்தில் கட்டை உடைந்த போது கோபம் தனியாத அந்த ஆசிரியர் சிறுவனின் முடியை பிடித்து இழுத்து அவனை சகட்டுமேனிக்கு அறைந்தார்.

வலி தாங்கமுடியாமல் கதறி அழுத அந்த சிறுவன் தன்னை அடிக்க வேண்டாம் என கெஞ்சியபடியே மயங்கி விழுந்தான்.

சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அப்பகுதி மக்கள் பிறகு அந்த ஆசிரியரை நையப்புடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments