எகிப்து நாட்டின் தீவு ஒன்றில் கரை ஒதுங்கிய மர்ம விலங்கு ; வேற்றுகிரக மிருகம் போல இருந்ததாக தகவல்

0 10927
எகிப்து நாட்டின் தீவு ஒன்றில் கரை ஒதுங்கிய மர்ம விலங்கு ; வேற்றுகிரக மிருகம் போல இருந்ததாக தகவல்

எகிப்து நாட்டின் தீவு ஒன்றின் கடற்கரையில் அதிசய உருவம் கொண்ட விலங்கு ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு ஏலியன் போலவும், கடல் குதிரை போன்றும் இது காட்சியளிக்கிறது. தாடைக்குள் மற்றொரு சிறிய தாடையுடன், கூரிய பற்களுடன் கடற்கரையில் இதனை கண்டதாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறந்து கிடந்த அந்த விலங்கிற்கு கண்கள் இல்லை. அது எந்த வகையான விலங்கு, அது எப்படி இறந்து கரை ஒதுங்கியது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments