மதுரையில் ஆசிரியை வீட்டில் ரூ.3 லட்சம் நகையை திருடி விற்ற மற்றொரு சக ஆசிரியை கைது.!

0 21190

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி விற்ற மற்றொரு ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம் சங்கர்நகரைச் சேர்ந்த செந்தில்நாயகி  மற்றும் ரஹீனா பேகம் ஆகியோர் அங்குள்ள மகாத்மா காந்தி பள்ளியில் ஆசிரியராக 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். 

இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில்  செந்தில் நாயகியின் லேப்டாப்பை கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற ரஹீனா பேகம் பீரோவில் இருந்த ஒன்பதரை சவரன் தங்க நகையை எடுத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

நகையை காணாத தால் அதிர்ச்சி அடைந்த செந்தில்நாயகி  போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில்  ரஹீனா பேகத்திடம் போலீசார் விசாரித்த போது நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments