சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் - சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்
18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு நேரிட்டால் பெற்றோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் எச்சரித்துள்ளார்.
நேற்று ஒரே நாளில் வாகனம் ஓட்டி சிக்கிய 525 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
Comments