ஒற்றை தலைமை கோஷம்.... அடுத்தடுத்து ஆலோசனை!

அதிமுகவில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி கோஷங்கள் வலுத்துவரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார். சென்னையிலும் இன்று தீவிர ஆலோசனைகள் கூட்டங்கள் தொடர்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் வலுத்து வருகின்றன. 23 ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ் க்கு ஆதரவாக தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது போல், சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆதரவு கோஷம் எழுப்பினார்கள்....
அதேசமயம்,சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், அலெக்சாண்டர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.
இதனிடையே, வரும் 23ம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து கட்சியின் தீர்மான குழு கட்சியின் தலைமையகத்தில் ஆலோசனை நடத்தியது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பொன்னையன், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, செம்மலை, வைகைசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழுவின் ஆலோசனை நடைப்பெற்று வந்த நிலையில், கூட்டத்தின் பாதியிலேயே மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி வி சண்முகம் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தலைமை அலுவலத்திற்கு வந்தார். அப்போது ஓபிஎஸ் க்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன
Comments