கேரளாவில் 6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்டு சாதனை படைத்த சின்னு கோழி..

0 3307
கேரளாவில் 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்டு, இணையத்தில் சின்னு என்ற கோழி வைரலாகி வருகிறது.

கேரளாவில் 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்டு, இணையத்தில் சின்னு என்ற கோழி வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு கோழி பிஜு - வின் மகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையடுத்து அவரது மகள், கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் கோழி தனது காலை தூக்கி நடக்க ,காலில் அடிபட்டிருக்கும் என பிஜு சின்னு கோழியின் காலில் தைலம் போட்டு விட்டுள்ளார்.

காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டுள்ளது, சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24 முட்டைகளை போட்டு வீட்டாரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments