இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல ரூ.50,000 லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை.. பணம் இல்லாததால் தெருதெருவாக பிச்சை எடுத்த பரிதாபம்..!

0 4022
இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல ரூ.50,000 லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை.. பணம் இல்லாததால் தெருதெருவாக பிச்சை எடுத்த பரிதாபம்..!

பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனையடைந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் நடந்துள்ளது.

சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர், இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி உடலை வாங்க தனது மனைவியுடன் சென்றார்.

ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments