விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள்.. வேறு சமூகம் என்பதால் மருமகனை சுட்டுக்கொன்ற மாமனார்..!
விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள்.. வேறு சமூகம் என்பதால் மருமகனை சுட்டுக்கொன்ற மாமனார்..!
பீகாரில், வேறு சமூகத்தை சேர்ந்த நபரை மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில், மகளின் கணவரை, தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பக்ஸார் மாவட்டம் தும்ராவோன் கிராமத்தில், முடிதிருத்தும் கடையில் ஷேவ் செய்து கொண்டிருந்த நபரை, இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
விசாரணையில், குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக, மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதல் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரத்தில் தனது மருமகனை, மகனின் உதவியுடன் சுட்டுக்கொன்றதாக பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
Comments