ஹாலிவுட் நடிகர் ரே லியோட்டா காலமானார்..!

ஹாலிவுட் நடிகர் ரே லியோட்டா காலமானார்..!
பிரபல ஹாலிவுட் நடிகர் ரே லியோட்டா டாம்னிக்கன் குடியரசு நாட்டில் காலமானார்.
70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரே லியோட்டா, 1990ஆம் ஆண்டு மார்டின் ஸ்கோர்சசி இயக்கத்தில் வெளியான குட்ஃபெல்லாஸ் திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார்.
67 வயதான லியோட்டா, ஜேசி நிட்டோலோ என்ற பெண் தொழிலதிபரை இரண்டாவதாக மணம் செய்ய இருந்தார்.
கரிபீய தீவு நாடான டாம்னிக்கன் குடியரசிற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த லியோட்டா இரவு தூக்கத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments