அன்னதானத்தின் போது நரிக்குறவர்களை தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கியதாக புகார் - இருவர் சஸ்பெண்ட்

0 3569

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில், அன்னதானத்தின் போது நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோவில் செயல் அலுவலரும், சமையலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இக்கோவிலில் கடந்த ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவர் பெண் விரட்டி அடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், மீண்டும் நரிக்குறவர்களை தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

அதன் பேரில், கோவில் செயல் அலுவலர் சிவ சண்முக பொன்னியையும், சமையலர் குமாரியையும் சஸ்பெண்ட் செய்து அறநிலை துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments