தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

0 1966
தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

விருதுநகரில் தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இயந்திரங்கள், எண்ணெய் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

பாண்டியன் நகரில் அப்பண்ணசாமி என்பவருக்குச் சொந்தமான கோகிலா எண்ணெய் ஆலையில் நேற்றிரவு 9 மணி அளவில் திடீர் என தீ பிடித்து கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் 6 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சிவகாசியில் இருந்து சிறப்பு நுரை நகர்வு ஊர்தியும் வரவழைக்கப்பட்டது . தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments