ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ; திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணி பாதிப்பு

0 2481
ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ; திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணி பாதிப்பு

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

ரம்பான் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளுக்கிடையே சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மாலையில் நிகழ்விடத்தில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, மீட்புப் பணியில் இருந்த இயந்திரங்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments