புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை மழையால் இடிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்..!

0 2660

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கூனிநாலா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது.

இதில் 6 அல்லது 7 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விடிய விடிய நடைபெற்றன.

காயங்களுடன் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஏராளமானோர் அதில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளில் சிக்கிய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 10 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே, சுரங்கப்பாதை கட்டுமானங்கள் இடிந்து விழுந்த இடத்தில், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments