மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு

0 2536
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரக்கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரக்கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலையை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வைத்தியலிங்கம் ஆகியோர், ஆதரவு கோரி கடிதத்தை வழங்கினர்.

இதனை அடுத்து பேட்டியளித்த அண்ணாமலை, மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments