பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

0 4969
பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

செங்கல்பட்டு அருகே 60 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த டிராக்டர் மீது மோதாமல் இருக்க திருப்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் சென்ற அரசுப் பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சென்றபோது சாலையை கடக்க டிராக்டர் ஒன்று குறுக்கே நின்றுள்ளது.

அப்போது, பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடிக்க முயன்ற நிலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதன் முன் சக்கரத்தின் அச்சு முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, பேருந்து ஓட்டுனர் சாலையோரம் இருந்த கடையில் மோதி வாகனத்தை நிறுத்தினார்.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், அவர்கள் மாற்றுப்பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments