வருவாய் ஆய்வாளர் எனக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய நபர் கைது

வருவாய் ஆய்வாளர் எனக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய நபர் கைது
சேலத்தில் வருவாய் ஆய்வாளர் எனக் கூறி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு தொகை பெற்றுத் தருவதாக ஏமாற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபாகரன், வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருவதாக போலி அடையாள அட்டை தயார் செய்துவைத்து, கடந்த சில ஆண்டுகளாக விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து காப்பீடு தொகையை பெற்றுத் தருவதாக கூறி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் மீது சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள போதும் போலீசிடம் சிக்காமல் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுபோதையில் விபத்தில் சிக்கிய இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நடத்தப்பட்ட விசாரணையில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments