வளைவில் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து.. லேசான காயங்களுடன் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி..!

0 2744
வளைவில் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து.. லேசான காயங்களுடன் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி..!

கேரளாவில், சாலை வளைவில் அதிவேகமாக வந்த காரும்- பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 9ஆம் தேதி, கொல்லம் மாவட்டத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார், வளைவு ஒன்றில் வேகத்தை குறைக்காமல் அதிவேகமாக வந்த போது, எதிர்திசையில் சென்டர் லேனை தாண்டி வலதுபுறம் ஏறி வேகமாக வந்த பைக் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட நிலையில், அந்த கார் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி மீது மோதி நின்றது.

இதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார். மேலும் பைக்கில் வந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments