உயிரிழந்த மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை.. தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதாக புகார்..!

0 2988
உயிரிழந்த மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை.. தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதாக புகார்

ஆந்திராவில், தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதால், உயிரிழந்த மகளின் உடலை தந்தை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொத்தபள்ளி பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை அக்சயா, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

குழந்தையை மீட்ட பெற்றோர் நாயுடுபேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. செய்வதறியாத தந்தை, மகளின் உடலை மருத்துவமனையில் இருந்து கொத்தப்பள்ளிக்கு பைக்கிலேயே கொண்டு சென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments