இந்திய எல்லை அருகே மர்ம சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு.. இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு..!

இந்திய எல்லை அருகே மர்ம சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு.. இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு..!
ஜம்மு காஷ்மீரின் சம்பாவில் பாகிஸ்தான் எல்லையில் 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையைக் கண்டறிந்து ஊடுருவல் முயற்சியைத் தடுத்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலையில் எல்லைப் பகுதியில் ரோந்து சென்ற படையினர் ஒரு மணல்மூட்டைகள் போட்டு மறைக்கப்பட்டிருந்த சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்தனர்.
தடுப்பு வேலியமைத்திருக்கும் எல்லையில் ஒருபுறமிருந்து மற்றொரு புறத்துக்கு ஊடுருவும் வகையில் 150 மீட்டர் நீளத்துக்கு இந்த சுரங்கப்பாதை தோண்டப்பட்டிருந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி பூரா தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு முதல் இதுவரை எல்லைப் பகுதியில் 11 சுரங்கப் பாதைகளைக் கண்டறிந்துள்ளது மூடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments