தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

நாமக்கலில் வெல்டிங் மிஷின் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தை துளையிட்டு, சுமார் 5லட்சம் ரூபாய் பணத்தை திருடியதோடு, போலீசில் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி விட்டுச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெருமாள் கோயில்மேடு பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. ஏ.டி.எம். மையத்தில் பாதுகாப்புக்கு காவலாளி இல்லாத நிலையில், நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் வெல்டிங் மிஷின் மூலம் துளையிட்டு, பணம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியோடு பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
முன்னதாக, ஏ.டி.எம். மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கான இணைப்பு மற்றும் அலாரத்திற்கான இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள், அந்த அலாரத்தையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்தோடு, மோப்ப நாய் கண்டறிய முடியாத வகையில் ஏ.டி.எம். மையம் முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டுச் சென்ற மர்ம நபர்கள், ஏ.டி.எம். மையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பணம் இருந்த பெட்டியை தூக்கிபோட்டுவிட்டு, பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பியோடியிருக்கின்றனர்.
Comments