ஓசூரில் கொட்டித் தீர்த்த கனமழை.. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு
ஓசூரில் கொட்டித் தீர்த்த கனமழை.. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கனமழை வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடிய ஓடையை கடக்க முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்நிலையில், பி.செட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த ஜலஜா என்பவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மாசிநாயகணபள்ளி அருகே ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அருகில் இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை அருகில் உள்ள ஏரியில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments