நாமக்கல்லில் சிறுமியை கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவம்.. சிறுமியை பத்திரமாக மீட்டு கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்த போலீசார்.!

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டியில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவத்தில் சிறுமியை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்தனர்.
வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கவுசல்யா, ஜெய்சன் மற்றும் சிறுமி மவுலனிசா ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கும்பல், இருவரை கட்டிப் போட்டு விட்டு சிறுமி மவுலனிசாவை கடத்திச் சென்றது.
6 தனிப்படை போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் கடத்தல் கும்பல் அலங்காநத்தம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சிறுமியை விட்டுவிட்டு தகவலளித்து தப்பியதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியை மீட்ட போலீசார், அவர் அளித்த தகவலில் உறவினர்களான மணிகண்டன், பொன்னுமனி தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments