இந்தியப் பெருங்கடலில் பெருகும் சீனாவின் கடற்படை செயல்பாடுகள்.. இந்தியாவுக்கு உதவத் தயார் என்று அமெரிக்கா அறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் பெருகும் சீனாவின் கடற்படை செயல்பாடுகள்.. இந்தியாவுக்கு உதவத் தயார் என்று அமெரிக்கா அறிவிப்பு
சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தடையற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், இந்திய ராணுவத்தினர் ரஷ்யாவின் பூர்வீகமான ஆயுதக் கொள்முதலை சார்ந்து இருக்காமல் விலகிச் செல்லவும் அமெரிக்கா உதவும் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்தி திட்டங்கள் அமெரிக்காவுக்குப் பொருத்தமானவையே என்றும் அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
Comments