ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல் வீசிய புள்ளிங்கோக்கள்..!

0 6043

நடிகர் ஹிப் ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி ரகளையில் ஈடுபட்டதாக இரு குடிகார புள்ளிங்கோக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீடு உள்ளது. இவர் ஹிப்ஹாப் பாடல்கள் பாடி பிரபலமான இவர், மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவில் மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹிப்பாப் தமிழா ஆதி வீட்டின் முன்பக்க கதவு சேதமானது. எதிர் வீட்டில் வசிப்பவர்கள் இதனை கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளனர். போலீசாரை கணடதும் மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அங்கு வந்த காரின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர்.

அதை வைத்து காரின் உரிமையாளரான அஜய் வாண்டையாரின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அஜய் வாண்டையாரின் ஆக்டிங் டிரைவர்களான வடபழனியை சேர்ந்த பிரேம்குமார், மதுரையை சேர்ந்த அர்ஜூன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்த போது, குடி போதையில் அது ஆதியில் வீடு என்பது தெரியாமல் கல்வீசியதாக தெரிவித்துள்ளனர். கைதான இரு புள்ளிங்கோக்களையும், கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதே நேரத்தில் ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீச்சி தாக்குதலின் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments