மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் நாளை மாலை சென்னைக்கு விமானத்தில் வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் ஆவடிக்குச் சென்று அங்குள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் விருந்தினர் மாளிகையில் நாளை இரவு தங்குகிறார். விமான நிலையத்தில் இருந்து ஆவடி வரை அமித் ஷாவுக்கு வரவேற்பளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
விருந்தினர் மாளிகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளனர். ஞாயிறன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா தனி விமானத்தில் புதுச்சேரி செல்கிறார்.
புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதுடன், கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார். அதன்பின் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைப்பதுடன் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
Comments