திருவாரூரில் 15 வயது சிறுமியை கட்டையால் தாக்கி பாழடைந்த வீட்டில் வீசி சென்ற மர்ம நபர்கள்.!

திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கட்டையால் தாக்கி பாழடைந்த வீட்டில் வீசி சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூரில் வசித்து வரும் தந்தையை இழந்த சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் தங்கி வரும் நிலையில் நேற்று இரவு பொருட்கள் வாங்க சிறுமி கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அவரை தேடி அலைந்த சிறுமியின் தாய் மற்றும் அத்தை குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாழடைந்த வீட்டில் சிறுமி கைகள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததையடுத்து சிறுமி மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விசாரணையில் கடைக்கு சென்ற சிறுமியை இரண்டு மர்மநபர்கள் பின் தொடர்ந்து சென்று தலையில் தாக்கி கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Comments