நடிகர் சூர்யா கையில் காளையுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரல்.!

0 4445

நடிகர் சூர்யா, கையில் காளையுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படபிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளுக்கு இடையே, இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கான பயிற்சியிலும் சூர்யா ஈடுபட்டு வருகிறார்.

ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் காளைகளுடன் பழகி பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், படபிடிப்புக்கு இடையே ஓய்வு நேரத்தில் காளையை பிடித்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த சூர்யா கையில் காளையுடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments