ஆந்திராவில் அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் போராட்டம்... வாகனத்திற்கு தீ வைத்தபோது போராட்டக்காரர்கள் மீது பரவியதால் பரபரப்பு

0 1876

ஆந்திராவில் அமைச்சர் பதவி கிடைக்காதவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. உதயபானுவின் ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தபோது அது போராட்டக்காரர்கள் மீது பரவியது.

அம்மாநிலத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்ற நிலையில், தங்கள் பகுதி உறுப்பினருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காததை எதிர்த்து ஆளுங்கட்சிக்கு எதிராக அக்கட்சியினரே போராட்டம் நடத்தினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைமறியலில் அவர்கள் ஈடுபட்டதுடன், வாகனங்கள், டயர் போன்றவற்றை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சரவையில் இடம் கிடைக்காததை அடுத்து, அம்மாநில உள்துறை அமைச்சராக பதவிவகித்த சுசித்ரா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், முதலமைச்சர் ஜெகன் மோகனின் உறவினரான பெலினேனி ஸ்ரீநிவாச ரெட்டியும் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments