காவல்நிலையத்துக்கு வரும் புகார்கள் குறித்து நானே விசாரிப்பேன்.. கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பேட்டி

0 1790
காவல்நிலையத்துக்கு வரும் புகார்கள் குறித்து நானே விசாரிப்பேன்.. கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பேட்டி

காவல் நிலையத்துக்கு வரும் புகார்கள் குறித்து தினமும் மாலை பொதுமக்களிடம் போன் செய்து தாமே விசாரிக்கவுள்ளதாகவும் அதனால் காவலர்கள் யாரும் லஞ்சம் வாங்க வாய்ப்பில்லை என்றும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் தெரிவித்தார்.

அண்மையில் 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நாகர்கோவில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி தங்கவேலு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் வருகைப் பதிவேடு அமைக்கப்படும் என்றும் அந்த பதிவேட்டில் யார் காவல் நிலையத்திற்கு வந்தார்கள், எதற்காக வந்தார்கள்  என்பதை பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments