மணமக்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டீசல் பரிசு.. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருவதை குறிக்கும் வகையில் பரிசு

0 1814
மணமக்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டீசல் பரிசு.. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருவதை குறிக்கும் வகையில் பரிசு

செங்கல்பட்டில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு, மணமகனின் நண்பர்கள் ஒரு லிட்டர் பெட்ரோலையும், ஒரு லிட்டர் டீசலையும் பரிசாக வழங்கினர்.

செய்யூரில் நடைபெற்ற கிரேஷ்குமார் - கீர்த்தி தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணமகனின் நண்பர்கள் மேடையில் ஏறி 1 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டீசல் அடங்கிய பாட்டில்களை பரிசளித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் குறிக்கும் வகையிலேயே அவற்றை பரிசளித்ததாக மணமகனின் நண்பர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments