பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பு..!

0 5639

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைமையில் அமைந்த புதிய அரசின் தேனிலவு காலம் முடிந்துவிட்டது எனவும் இனி பாஜக திமுகவிற்கு பாடம் புகட்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக டாக்டர் நரசிம்மன் சாலையில் பாஜக கொடியை தவறுதலாக தலைகீழாக குஷ்பு ஏற்றி சென்ற நிலையில், அவர் அங்கிருந்து சென்றவுடன் உடனடியாக கொடியை கீழிறக்கிய நிர்வாகிகள் அதை சரிசெய்து மீண்டும் ஏற்றி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments