ரூ.5 லட்சம் -25 சவரன் கூடுதல் வரதட்சனைக்காக 5 மாத கருவை கலைத்த கொடுமை..! மாமியார் - கணவன் அட்டூழியம்..!

0 2914
ரூ.5 லட்சம் -25 சவரன் கூடுதல் வரதட்சனைக்காக 5 மாத கருவை கலைத்த கொடுமை..! மாமியார் - கணவன் அட்டூழியம்..!

கடலூர் அருகே 5 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் வன அலுவலருக்கு கசாயம் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் வன அலுவலராகப் பணியாற்றி வரும் 29 வயது பெண்ணிற்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்குப் பிறகும் கணவர் வீட்டில் 25 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் பணமும் கூடுதலாக வரதட்சணையாக வேண்டும் எனக் கேட்டு துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.

இதற்கு அந்த வன அலுவலர் மறுப்பு தெரிவிக்கவே, கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை திட்டி மனவேதனைக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வரதட்சணை கொடுக்காத மருமகளின் வயிற்றில் தங்கள் வீட்டு வாரிசு வளரக்கூடாது என்ற தீய எண்ணத்தில், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கஷாயம் கொடுப்பதாக கூறி ஒரு திரவத்தை கட்டாயப்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதில், அந்த பெண் வன அலுவலரின் கர்ப்பம் கலைந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் வன அலுவலர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உண்மையென தெரிய வந்ததைத் தொடர்ந்து கணவர் ஐயப்பன், மாமியார் மல்லிகா மற்றும் இரண்டு நாத்தனார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கணவர், மாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கேட்பதே குற்றம் ... அதற்காக குடும்பத்திற்கு வரவேண்டிய வாரிசை கருவிலே கலைப்பதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர். கொடூரமனம் படைத்த மாமியார் மற்றும் கணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments