ஆட்சியர்களும், அதிகாரிகளும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1722
ஆட்சியர்களும், அதிகாரிகளும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஆட்சியர்களும், அதிகாரிகளும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனான ஒருங்கிணைந்த 3 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாளான இன்று ஆட்சியர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஆட்சியர்களே காரணம் என்ற அவர், தடுப்பூசி இயக்கத்திற்கு ஆட்சியர்கள் அளித்த ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் வனப்பரப்பை அடுத்த 10ஆண்டுகளில் 33சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற முதலமைச்சர், மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆட்சியர்கள் வழிகாட்டியாக திகழ்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments