சாலையில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது

0 2865

சென்னையில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 8 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

படப்பை பகுதியில் நேற்றிரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஏரிக்கரையை சேர்ந்த மகேந்திரன் என்பவரை வழிமறித்த 6 இளைஞர்கள், கழுத்தில் கத்தியை வைத்து அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த வினோத், நவலூரை சேர்ந்த சுரேஷ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments