இந்தியாவில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா உறுதி.. 804 பேர் பலி

0 1226
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 804 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 3 புள்ளி 48 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு 6 சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments