ராணுவ நாளையொட்டி இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு

0 3374

ராணுவ நாளையொட்டிப் போர்க்களத்தில் படையினரின் துணிச்சலான செயல்பாடுகள், போர்க்கருவிகள், ராணுவத் தளவாடங்களைக் கையாளுதல் ஆகியன தொடர்பான ஒரு வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

பல்வேறு வகையான நிலங்கள், காலநிலைகளிலும் ராணுவத்தினர் பணியாற்றுவதுடன், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை ஏவும் கருவிகளை இயக்குவதும் அதில் இடம் பெற்றுள்ளது.

விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் போர்க்களத்தில் இறங்குவது, கப்பல்களில் போர்க்களத்தைச் சென்றடைவது உள்ளிட்ட காட்சிகள் ராணுவத்தின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக்க பணிகளைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments