வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை.. 20 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

0 2766

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே வீடு புகுந்து அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு பணம், நகைகளை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடமலைபுத்தூர் கிராமத்தை சேர்ந்த கஜவரதன் என்பவர் தனது மனைவி, மகன், மருமகளுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு இரவு 8.45 மணிக்கு இவரது வீட்டுக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் மங்கி குல்லா அணிந்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு பீரோவை உடைத்து 20 சவரன் தங்க நகைகளையும், 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கொள்ளை அடித்த பிறகு அந்த மர்ம கும்பல், டிவியில் சவுண்டை அதிகமாக வைத்துவிட்டு வீட்டின் கதவை பூட்டிவிட்ட சாவியைக் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

சிறிது நேரம் கழித்த பின்னரே, வீட்டிலிருந்த கஜவரதன் தன்னுடைய வாயால் கையில் இருந்த கத்தியை எடுத்து அதன் பின்னர் ஒவ்வொருவரையும் கைகளையும் கட்டப்பட்டிருந்த அவிழ்த்தனர்.

அதனைத் தொடர்ந்து கஜவரதன் அருகில் இருந்த தனது நண்பர்களுக்கு தெரிவிக்கவே, அச்சிறுபாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments