பொங்கல் திருநாளையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

0 2434
பொங்கல் உள்ளிட்ட பல்வேறு திருநாட்களையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் உள்ளிட்ட பல்வேறு திருநாட்களையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் என்னும் பெயரிலும், வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்னும் பெயரிலும் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் உத்தராயனம், லோகிரி, போகாலி பிகு, பவுஷ் பர்வா என்னும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டிக் குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தியில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை எடுத்துக்காட்டும் இந்த விழாக்கள் இயற்கையுடனான நமது இயற்கையான உறவைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விழாக்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments