திமுக ஆட்சியின் 8 மாத கால செயல்பாடுகளை விளக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ வெளியீடு

0 3845

திமுக ஆட்சியின் 8 மாத கால செயல்பாடுகளை விளக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ வெளியிட்டுள்ளார். 

இதுவரை சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கம்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கம்

திமுக ஆட்சிக்கு வந்த நாள் அன்றே 5 முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்ற கையெழுத்து

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது

கொரோனா நிவாரண நிதி ரூ.4ஆயிரம், 2.15கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3குறைத்து விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டது

நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு கையெழுத்திடப்பட்டது

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் புதிய துறை உருவாக்கம்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் காப்பீடு திட்டத்தின் கீழ் செலுத்தப்படும்

தேர்தலுக்கு முன் பெற்ற மனுக்களில் 2.5 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 50லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

கற்றல் இழப்பை ஈடு செய்ய 80,138 இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன

பாதியிலேயே படிப்பை விட்ட, 1.73லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

முதன்முறையாக கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரத்து

விபத்தில் சிக்கியோரை காப்பாற்ற, முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் இன்னுயிர் காப்போம் திட்டம்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 4,482 பேர் பயனடைந்திருக்கின்றனர்

சமீபத்தில் கோவையில் விபத்தில் சிக்கிய இளைஞர் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கிறார்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லாத அறிவிப்புகளையும் நிறைவேற்றியுள்ளோம், நிறைவேற்றுவோம்

திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன

இதில், 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, 75% அறிவிப்புகள் நிறைவேற்றம்

வெளிப்படையான நிர்வாகத்தை திமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது

தலைமைச் செயலக கோட்டையில் எந்த கோப்புகளும் தேங்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது

முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 2,683 கோப்புகள் வந்தன

இதில் 2,619 கோப்புகளில் கையெழுத்திட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அமைச்சர்களிடம் வரும் கோப்புகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments