கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை.. மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்..
விருதுநகரில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
விருதுநகரில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
NGO காலனி கம்பர் தெருவைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி கற்பகத்துக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவத்தின் போது கோபத்தின் உச்சியில் இருந்த கண்ணன், மனைவி கற்பகத்தை சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. அதன்பின் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் கண்ணன் சரண் அடைந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்த கற்பகத்தின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments