வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்ய தேனி நீதிமன்றம் உத்தரவு.!

வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்ய தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக நிர்வாகி மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 7ந்தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments