சென்னையில் கொரனோ பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 42 சிறப்பு ஆம்புலன்ஸ்கள்

0 2075

கொரோனா பாதித்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக, 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் தொற்று பாதித்த நோயாளிகளை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல, முதற்கட்டமாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

கொரனோ பாதித்தவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல 1913 எண்ணுக்கோ அல்லது 044-25384520, 044-46122300 எண்ணுக்கு அழைத்தால் இந்த வாகனங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments