லாரியை முந்திசெல்ல முயன்ற போது விபரீதம் ; நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலி

லாரியை முந்திசெல்ல முயன்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞர்
திருப்பூரில், லாரியை முந்திசெல்ல முயன்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞர், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் மன்னரை பகுதியில் சென்றுகொண்டிருந்த நிலையில், முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்ததால் சடன் பிரேக் போட்ட நிலையில், அந்த சாலை கரடு முரடாக இருந்ததால் நிலைத்தடுமாறி லாரிக்குள் விழுந்தார். இதில் லாரியின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments