முறையற்ற உறவை கைவிடாததால் ஆத்திரம்.. மனைவியின் ஆண்நண்பர் கழுத்தை அறுத்து, பெட்ரோல் ஊற்றிக் கொலை.!
நாமக்கல் அருகே மனைவியின் ஆண்நண்பரை கழுத்தை அறுத்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவன் உள்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலப்பட்டியை சேர்ந்த நடேசனுக்கு லதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தனது காண்டிராக்டர் பணிக்கு கணக்கு வழக்குகளை கையாள அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு எருமப்பட்டி அருகே புதுக்கோட்டையில் இருந்து தூசூர் செல்லும் சாலையின் ஓரம் உள்ள புதரில் செந்தில்குமார் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது செந்தில்குமாரை நடேசனும், அவரது உறவினர்களும் சேர்ந்து தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
மனைவியுடன் முறைகேடான தொடர்பில் ஈடுபட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
Comments