நாடு முழுவதும் சிறார்களுக்கான தடுப்பூசி இன்று தொடக்கம்.!

0 1366

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் இன்று அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்தப் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி, 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சுமார் 10 கோடி பேருக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக கோவின் இணையதளத்தில் நேற்று முன்தினம் முதல் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 33 லட்சத்து 46 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை, சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்புப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சிறார்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிப்பதால், ஒவ்வொரு பள்ளியிலும் இடம் ஒதுக்கி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும். தனியாக தடுப்பூசி மையங்கள் அமைப்பது தொடர்பாகவும், தடுப்பூசி செலுத்துவோருக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments