ஆட்டோவும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து : பரபரப்பு சிசிடிவி காட்சி

0 2903

ர்நாடகாவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மங்களூரு அருகே கிணிக்கோலியில் வாலிபர் ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

கவனமின்றி இருசக்கர வாகன ஓட்டி சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராமல் அவ்வழியே வந்த ஆட்டோ வேகமாக அவர் மீது மோதியது.

இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி பலத்த காயமடைந்தார். மேலும், விபத்தில் ஆட்டோவும் சாலையோர பள்ளத்தில் இறங்கியதில் அதன் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments