நாட்டின் பொருளாதார வளர்ச்சி எட்டு விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது ; பிரதமர் மோடி

0 3060
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எட்டு விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எட்டு விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உழவர் உதவித்தொகைத் திட்டத்தில் பத்துக்கோடிக்கு மேற்பட்ட உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் என்கிற கணக்கில் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைப் பிரதமர் விடுவித்தார்.

351 உழவர் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 24ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் 14 கோடி ரூபாய் பங்கு மானியத்தையும் விடுவித்தார். அதன்பின் உரையாற்றிய பிரதமர், சாதனை அளவாக வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளதாகவும், ஜிஎஸ்டி வருவாயில் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யுபிஐ வாயிலாகக் கடந்த ஆண்டில் 70 இலட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 2070ஆம் ஆண்டில் கார்பன் டை ஆக்சைடு வெளியிடாமல் இருப்பது என்கிற இலக்கை எட்டுவதற்காக இந்தியாவில் மின்சார வாகனத் தயாரிப்பைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments