மக்களுக்கு உணவு தான் முக்கியம், அணுஆயுதம் அல்ல.. கட்சி கூட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோன்ங் உன் பேச்சு.!

0 4661

2022-ல் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியம் என்றும், அணுஆயுதங்கள் அல்ல என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோன்ங் உன் பேசியுள்ளார்.

தந்தையின் மரணத்திற்கு பிறகு அந்நாட்டு அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், கொரிய தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் பேசுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடகொரிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், ஐந்தாண்டு திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும், அவர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக இத்தகைய கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் கிம் ஜோன்ங் உன், வடகொரியாவில் பஞ்சம் நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், முதல்முறையாக இவ்வாறு பேசியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments