தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி

0 7150

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments