ஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்த மாற்றங்களால் புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கும்.!

0 5256

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்த மாற்றங்களால் புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை உயர உள்ளது.

ஆயத்த ஆடைகள், காலணிகள் போர்வைகள் போன்ற ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தியிருப்பதால் சில்லரை வர்த்தகத்தில்  ஜனவரி 1 முதல் இந்தப் பொருட்களின் விலை உயரும்.

ஆயிரம் ரூபாய்க்கு மேல்பட்ட விலை உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்,டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஓலா ஊபர் போன்ற ஆப்கள் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்தால் 5 சதவீத வரி வசூலிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.சாலைகளில் நேரடியாக ஆட்டோ பேசினால் வரி கிடையாது. இந்த புதிய வரிவிதிப்பும் புத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments